Memories...!


நான் தனியான பொழுதினில்
உறவாடும் உன் நினைவுகள்
காற்று வீசிய பொலுதிலும்
கலையாத கனவுகள்

மறக்கத்தான் நினைக்கிறேன்
மறப்பதை மறக்கிறேன்
உன் நினைவு என்னும் கனவுகளில்
நிதம் நிதம் மறிக்கிறேன்

என் விடியலில் நிழலாய்
இரவினில் கானலாய்
நீயே என்னை வென்றாய்
நீயே என்னை கொன்றாய்
காதல் அமுதில்
நஞ்சினை கலந்தாய்

உன் நினைவு
என்னை கொன்றாலும்
உன்
நினைவிலே உயிர்
வாழ்வேன்...!